பட்ஜெட் குழப்பம் தீர்ந்தது... உறுதியாகும் 3000 கோடி முதலீடு

Car Maker Investment
பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீதான வரி உயர்த்தப்படலாம் என்ற அச்சத்தால் ஒத்திப்போட்டிருந்த முதலீடு திட்டங்களை மீண்டும் செயல்படுத்த கார் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக சியாம் தெரிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களால் டீசல் கார் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. எனவே, டீசல் கார்களை விற்பனைக்கு கொண்டு வருவதில் கார் நிறுவனங்கள் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்த நிலையில், பட்ஜெட்டில் டீசல் கார்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படலாம் என்ற அச்சத்தால், டீசல் கார்களுக்கான முதலீடு திட்டங்கள் கார் நிறுவனங்கள் ஒத்திப்போட்டன.

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் டீசல் எஞ்சின் தயாரிப்புக்காக புதிய ஆலை கட்ட ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதேபோன்று, மாருதி, வோக்ஸ்வேகன் உள்ளிட்ட பல முன்னணி கார் நிறுவனங்கள் டீசல் எஞ்சின் தயாரிப்புக்காக முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளன.

இதனால், 3000 கோடி முதலீடு கேள்விக்குறியானது. இந்த நிலையில், எதிர்பார்த்தது போல டீசல் கார் மீது குறிப்பிட்டு கூடுதல் வரி எதுவும் விதிக்கப்படவில்லை.

இதனால், தங்களது முதலீட்டு திட்டங்களை செயல்படுத்த கார் நிறுவனங்கள் பரிசீலித்து வருவதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் கூட்டமைப்பு (சியாம்) தெரிவித்துள்ளது. புதிய முதலீடுகள் செய்யப்பட்டால் அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Carmakers are now speaking about these investments as the budget has not launched this much feared diesel car tax. We had earlier reported that an investment of about Rs.3,000 crores was with held by car makers as they were awaiting the budget. Now Mahindra, Maruti Suzuki and Hyundai have confirmed that they will go ahead with their plans.
Story first published: Monday, March 19, 2012, 14:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X