யூஸ்டு கார் மார்க்கெட்டில் கார்நேஷன்: 160 ஷோரூம்களை திறக்கிறது

Car nation Auto
கார் சர்வீஸ் ஸ்டேஷனில் பிரபலமான கார்நேஷன் நிறுவனம், அடுத்து யூஸ்டு கார் மார்க்கெட்டில் களமிறங்குகிறது. நாடுமுழுவதும் 160 யூஸ்டு கார் ஷோரூம்களை திறக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மல்டி பிராண்டு கார் சர்வீஸ் செய்வதில் கார்நேஷன் நிறுவனம் பிரபலமாக திகழ்கிறது. நாடு முழுவதும் 16 நகரங்களில் 25 கார் சர்வீஸ் ஸ்டேஷன்களை அமைத்து கார்நேஷன் சேவை வழங்கி வருகிறது.

இந்த நிலையில், யூஸ்டு கார் மார்க்கெட்டில் களமிறங்க உள்ளதாக கார்நேஷன் அறிவித்துள்ளது. இதற்காக, நாடு முழுவதும் 160 யூஸ்டு கார் ஷோரூம்களை அந்த நிறுவனம் திறக்கிறது.

சர்வீஸ் ஸ்டேஷன்களுக்காக ரூ.200 கோடி முதலீடு செய்துள்ள அந்த நிறுவனம் தற்போது யூஸ்டு கார் மார்க்கெட்டுக்காக ரூ.40 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கார்நேஷன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் காத்தர் கூறுகையில்,"யூஸ்டு கார் மார்க்கெட்டில் அதிக வர்த்தக வாய்ப்புகள் இருக்கின்றன. புதிய கார்களை விட யூஸ்டு கார்களின் விற்பனை விகிதம் அதிகம் இருக்கிறது.

எனவே, யூஸ்டு கார் மார்க்கெட்டில் இறங்குகிறோம். கார்களுக்கான மல்டி பாயிண்ட் செக்கப், இன்ஸ்யூரன்ஸ், ஆவணங்கள் சரிபார்த்தல் ஆகிய அனைத்து சேவைகளையும் இதன் மூலம் வழங்க உள்ளோம்.

மேலும், இன்ஸ்யூரன்ஸ் நிறுவனங்களி்ன் திட்டங்களை விற்பனை செய்வதற்கான லைசென்ஸ் பெறுவதற்காக, ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாகவும் கார்நேஷன் தெரிவித்துள்ளது.இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு தேவையான இன்ஸ்யூரன்ஸ் திட்ட சேவைகளை கார்நேஷன் வழங்கும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 7, 2012, 14:31 [IST]
English summary
Multi-Brand car service chain Carnation Auto, promoted by former Maruti Suzuki India chief Jagdish Khattar, is gearing up for an aggressive foray into the used-car market, with plans to open over 160 outlets across the country in the next three years.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+