யூஸ்டு கார் டீலர் நெட்வொர்க்கை 200ஆக உயர்த்தும் கார்நேஷன்

Carnation showroom
அடுத்த இரு ஆண்டுகளில் யூஸ்டு கார் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணி்ககையை 200 ஆக அதிகரிக்க கார்நேஷன் திட்டமிட்டுள்ளது.

நாட்டின் மிகப் பெரிய மல்டி பிராண்டு யூஸ்டு கார் விற்பனை நிறுவனமாக கார்நேஷன் திகழ்கிறது. மாருதி கார் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் கத்தர்தான் இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில், மார்க்கெட் வளர்ச்சியை கருத்தில்கொண்டு தனது வர்த்தக விரிவாக்கப் பணிகளை தீவிரமாக்கியிருக்கிறது கார்நேஷன். நாடு முழுவதும் கார்நேஷனுக்கு தற்போது 17 யூஸ்டு கார் ஷோரூம்களும், 24 கார் பராமரிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றன.

இதனை அடுத்த இரு ஆண்டுகளில் 200ஆக அதிகரிக்க அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஃபிராஞ்சீஸ் எனப்படும் ஒப்பந்த அடிப்படையிலான டீலர்களாக நியமிக்கப்பட்ட உள்ளனர்.

இதுகுறித்து ஜெகதீஷ் கத்தர் கூறுகையில்," யூஸ்டு கார் மார்க்கெட் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்து வருகிறது. ஆண்டுக்கு தற்போது 30 லட்சம் யூஸ்டு கார்கள் விற்பனையாகி வருகின்றன. வரும் 2014-15 ஆண்டில் இது 75 லட்சமாக அதிகரிக்கும்.

எனவே, வர்த்தக விரிவாக்கப் பணிகளை தீவிரப்படுத்தியிருக்கிறோம். அடுத்த இரு ஆண்டுகளில் எங்களது யூஸ்டு கார் ஷோரூம்கள் மற்றும் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

யூஸ்டு கார் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை அதிகம் தேவைப்படுகிறது. அதனையே, தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வருகிறோம். தற்போது மாதத்திற்கு 200 முதல் 220 யூஸ்டு கார்களை விற்பனை செய்து வருகிறோம்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Friday, August 10, 2012, 16:05 [IST]
English summary
Car nation, a prominent name in used car market is planning to augment its dealership to 200 in the next couple of years. The company will be expanding their outlet range to 200 in the next 2 years,says company's top official.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+