பழைய ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு மாற்றாக வரும் புதிய ஹைபிரிட் ஆட்டோ ரிக்ஷா

போக்குவரத்தில் ஆட்டோ ரிக்ஷாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, நகர்ப்புற போக்குவரத்தில் இன்றியமையாத வாகனங்களாக ஆட்டோ ரிக்ஷாக்கள் மாறிவிட்டன.
நாடு முழுவதும் தற்போது 7 லட்சம் ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்குவதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. தற்போது விற்பனை செய்யப்படும் ஆட்டோ ரிக்ஷாக்கள் பெட்ரோல் மற்றும் எல்பிஜியில் இயங்குகின்றன.
இந்த ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு மாற்றாக சுற்றுச் சூழல் மாசுபடுவதை வெகுவாக கட்டுப்படுத்தும் வகையில் பேட்டரி மற்றும் பெட்ரோலில் இயங்கும் இரட்டை எரிபொருள் தொழில்நுட்பம் கொண்ட ஹைபிரிட் ஆட்டோ ரிக்ஷாக்களை கார்நேஷன் அறிமுகப்படுத்துகிறது.
மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ்(ஜேஎன்என்யுஆர்எம்) இந்த ஆட்டோ ரிக்ஷாக்களை அறிமுகப்படுத்த உள்ளதாக கார்நேஷன் தெரிவித்துள்ளது.
எலிமென்ட்-6 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு வரும் இந்த புதிய ஹைபிரிட் ஆட்டோ ரிக்ஷா வரும் செப்டம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கார்நேஷன் நிறுவனத்தின் தலைவர் ஜெகதீஷ் கத்தார் தெரிவித்துள்ளார்.
எலிமென்ட்-6 ஹைபிரிட் ஆட்டோ ரிக்ஷா 5 கதவுகள் கொண்டதாக இருக்கும். 4 சிலிண்டர் 1.0 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








