ரூ.2,000 கோடிக்கு 23,500 கார்களை வாங்கும் டாக்சி நிறுவனம்

நாட்டின் மிகப்பெரிய வாடகை கார் நிறுவனங்களில் ஒன்றாக கார்ஸ் ஆன் ரென்ட் நிறுவனம் திகழ்கிறது. டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தற்போது சென்னை, பெங்களூர் உள்பட 13 நகரங்களில் டாக்சி சேவையை வழங்கி வருகிறது.
இதுவரை ரூ.400 கோடி முதலீ்டு செய்துள்ள இந்த நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் வித விதமான மாடல்களில் 6,500 கார்களை கொண்டு டாக்சி சேவையை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், புதிதாக 49 நகரங்களில் டாக்சி சேவையை துவங்குவதற்கு கார்ஸ் ஆன் ரென்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
புதிய நகரங்களில் துவங்கப்படும் சேவைக்காக 23,500 கார்களையும் வாங்கப்பட இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்மூலம், நாட்டின் மிகப்பெரிய டாக்சி நிறுவனமாக அந்த நிறுவனம் மாறும்.


Click it and Unblock the Notifications








