ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக எஞ்சின் ஆயில்: கேஸ்ட்ரால் அறிமுகம்

கேஸ்ட்ரால் ஆயில்
இந்தியாவில் முதல்முறையாக ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான பிரத்யேக எஞ்சின் ஆயிலை கேஸ்ட்ரால் அறிமுகம் செய்துள்ளது.

குறைந்த உராய்வு மற்றும் வெப்பத்தை வெகுவாக குறைக்கும் வகையில் இந்த ஆயில் தயாரிக்கப்படுவதால், ஸ்கூட்டர்களின் பெர்ஃபார்மென்ஸ் தூள் கிளப்பும் என கேஸ்ட்ரால் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கேஸ்ட்ரால் நிறுவன அதிகாரி கேதர் ஆப்தே கூறுகையில்," பைக்குகளுக்கு பயன்படுத்தும் ஆயிலை கியர் இல்லாத ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கு பயன்படுத்தக் கூடாது.

பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு இது பற்றி தெரிவதில்லை. மேலும், ஸ்கூட்டர் எஞ்சின்கள் அதிக பவரை வெளிப்படுத்தும் என்பதால் சீக்கிரமே சூடாகும். மேலும், எஞ்சின் இருக்கும் இடமும் காற்றோட்டமும் குறைவாக இருக்கும்.

எனவே, உராய்வை வெகுவாக குறைப்பதோடு, எஞ்சின் சூட்டை வெகுவாக தணிக்கும் ஸ்கூட்டெக் என்ற புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்படும் பிரத்யேக ஆயிலை அறிமுகம் செய்துள்ளோம். இந்த புதிய எஞ்சின் ஆயில் மூலம் ஸ்கூட்டர்களின் பெஃபார்மென்ஸ் சிறப்பாக இருக்கும்,"என்றார்.

4 ஸ்ட்ரோக் ஆட்டோமேட்டிக் ஸ்கூட்டர்களுக்கான இந்த ஆயில் ஆக்டிவ் ஸ்கூட்டர் என்ற பெயரில் 800 மிலி பேக்குகளில் கிடைக்கிறது. விலை ரூ.245 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 26, 2012, 16:50 [IST]
English summary
Castrol has recently launched Castrol Activ Scooter - India's first gearless scooter specific engine oil. Castrol Activ Scooter with incredible Scootek technology ® is an advanced, low friction, 4-stroke engine oil designed specifically for modern automatic scooter engines.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+