குவாட்ரிசைக்கிள் வாகனங்களுக்கு அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு?

Quadricycles
குவாட்ரிசைக்கிள் எனப்படும் சிறிய ரக பயணிகள் வாகனங்களுக்கு விரைவில் அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஆட்டோரிக்ஷா மற்றும் நானோ கார் போன்ற குட்டி கார்களுக்கு இடையிலான செக்மென்ட்டில் நிலைநிறுத்தப்படும் நான்கு சக்கர வாகனங்களைத்தான் குவாட்ரி சைக்கிள் என்று அழைக்கிறோம். குவாட்ரிசைக்கிளில் குறைந்த திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

பஜாஜ் ஆட்டோ வடிவமைத்திருக்கும் ஆர்இ60 பயணிகள் வாகனம் கூட ஒரு வகையில் குவாட்ரிசைக்கிள் ரகத்தை சேர்ந்ததுதான். மேலும், குவாட்ரிசைக்கிள் வாகனங்கள் பேட்டரியில் இயங்கும் மாடல்களிலும் விற்பனை செய்யப்படுகிறது.சில மாடல்கள் வித்தியாசமாகவும் வடிவமைப்பையும் பெற்றிருக்கும்.

இதேபோன்று, போலரிஸ் நிறுவனம் விற்பனை செய்து வரும் ஆஃப்ரோடு வாகனங்களும் இந்த பிரிவில் விழுகிறது. ஆனால், இந்த வாகனங்களை பிற வாகனங்களை போன்று பதிவு செய்ய இயலாது. எனவே, இவற்றை சட்டப்பூர்வமாக சாலைகளில் இயக்க முடியாத நிலை இருக்கிறது.

இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலில் எளிதாக செல்லும் இந்த வாகனங்கள் அதிக மைலேஜ் தரும் என்பதால் நம் நாட்டுக்கு சிறந்த போக்குவரத்து தீர்வாக கருதி இந்த வாகனங்களை விற்பனை செய்வதற்கு உடனடியாக அனுமதி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கும்பட்சத்தில் பிற வாகனங்களை போன்று இவற்றை சாலையில் இயக்க முடியும்.

இந்த வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகளை வகுக்கும் பணிகளை தற்போது மத்திய அரசு முடுக்கி விட்டுள்ளது. பைக்கிலிருந்து கார் வாங்க திட்டமிடுவோர்க்கு இந்த புதிய வாகனங்கள் நிச்சயம் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் கருத்தாக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 30, 2012, 12:43 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+