கார்களில் கருப்பு கண்ணாடிக்குத் தடை: சென்னையி்ல் இன்று அமலுக்கு வந்தது

Tinted Glass
கார்களில் கருப்பு கண்ணாடி பொருத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை சென்னையில் இன்று அமலுக்கு வந்தது. போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா இந்த தடை உத்தரவை அறிவித்தார்.

கருப்பு கண்ணாடி கொண்ட கார்களில் அதிக அளவில் குற்றச் செயல்கள் நடப்பதாகவும், முன்பக்க கூடுதலாக கருப்பு பேப்பர் ஒட்டப்படும் கார்ளால் அதிக விபத்துக்கள் நடப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் கார்களில் கருப்பு கண்ணாடி ஒட்டுவதற்கு நாடு முழுவதும் தடை விதித்தது. மேலும், இந்த உத்தரவை மாநில போக்குவரத்து துறையினர் அமல்படுத்துவதற்கு கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தியது.

நாடு முழுவதும் இந்த தடையை நாளை மறுதினம் முதல் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், டெல்லி, மும்பை மாநகரங்களில் ஏற்கனவே இந்த தடை அமலுக்கு வந்துவிட்டது. டெல்லியில் கருப்பு கண்ணாடியுடன் வந்த 24,000 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வந்தது. போக்குவரத்து துறை கூடுதல் ஆணையர் சஞ்சய் அரோரா இந்த தடை உத்தரவு அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், இது உச்ச நீதிமன்ற உத்தரவு என்பதால் கால அவகாசம் எதுவும் வழங்க முடியாது எனவும், கார் உரிமையாளர்களே உடனடியாக கண்ணாடிகளில் ஒட்டப்பட்டிருக்கும் கருப்பு பேப்பரை உடனடியாக நீக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

தடையை மீறி கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்ட கார்களில் வருவோர்க்கு முதல் முறை ரூ.100 அபராதமாகவும், இரண்டாம் முறை ரூ.300 அபராதம் விதிக்கப்படும் என்றும் தொடர்ந்து மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 17, 2012, 15:29 [IST]
English summary
The Supreme Court order on ban of tinted glass has come into effect in the Chennai from today. The SC has banned the use of tinted glass on cars blocking vision beyond permissible limits prescribed under the Motor Vehicles Act.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+