மைலேஜில் டாடா இண்டிகாவை பின்னுக்குத் தள்ளிய செவர்லே பீட்

Chevy Beat
இந்தியாவின் அதிக மைலேஜ் கொடுக்கும் கார் என்ற பெருமையை செவர்லே பீட் பெற்றுள்ளது. இதுவரை முதலிடத்தில் இருந்த டாடா இண்டிகா இவி2 தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டு இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியாவின் அதிக மைலேஜ் கொடுக்கும் கார் என்ற பெருமையை டாடா மோட்டார்சின் இண்டிகா இவி-2 இதுவரை பெற்றிருந்தது. அந்த கார் லிட்டருக்கு 25 கிமீ மைலேஜ் தருவதாக சான்றளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சமீபத்தில் இன்டர்நேஷனல் சென்டர் ஃபார் ஆட்டோமோட்டிவ் டெஸ்ட்டிங்(ஐசிஏடி) சமீபத்தில் அதிக மைலேஜ் கொடுக்கும் காருக்கான சோதனைகளை நடத்தியது. இதில், ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் செவர்லே பீட் டீசல் கார் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் செல்வதாக நிரூபணமானது.

இதற்கு முன் செவர்லே பீட் லிட்டருக்கு 24 கிமீ மைலேஜ் செல்வதாக சான்றளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், செவர்லே பீட் டீசல் காரின் எஞ்சினில் ஜிஎம் டியூனிங் செய்துள்ளது.

இதைத்தொடர்ந்து, நடத்தப்பட்ட சோதனையில்தான் செவர்லே பீட் லிட்டருக்கு 25.4 கிமீ செல்வதாக தற்போது சான்றளிக்கப்பட்டுள்ளது.

டாடா இண்டிகா இவி-2 காரில் 1.4 லிட்டர் எஞ்சினும், செவர்லே பீட்டில் 1.0 லிட்டர் எஞ்சினும் பொருத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 28, 2012, 9:45 [IST]
English summary
Chevrolet Beat small hatch back beats Tata Indicar ev2 in terms of mileage. The International Center for Automotive Testing (ICAT) has recently conducting mileage test of Beat diesel and acknowledged car as the most fuel efficient car in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+