ஜெனிவா மோட்டார் ஷோவில் புதிய செவர்லே குரூஸ் அறிமுகம்

Chevrolet Cruze
வடிவமைப்பு மற்றும் இதர கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய செவர்லே குரூஸ் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டது.

செவர்லே குரூஸ் பிரிமியம் கார் ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்புகளில் வெற்றிகரமான கார் மாடல்களாக திகழ்கிறது.இந்த நிலையில், சந்தை போட்டியை சமாளிக்கும் வகையில், புதிய குரூஸ் காரை ஜெனிவா மோட்டார் ஷோவில் ஜெனரல் மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

வெளிப்புறத்தை பொறுத்தவரையில், ஹெட்லைட் வடிவமைப்பு மாற்றம் கண்டுள்ளது. ஹெட்லைட்டில் கிளியர் லென்சுகள் பொருத்தப்பட்டிருப்பதால் பார்க்க பளிச்சென்று இருக்கிறது. ஹெட்லைட் டூம் உட்புறம் சில்வர் ரிஃப்லெக்டருக்கு பதில் கருப்பு நிற கோட்டிங் கொடுக்கப்பட்டிருப்பது கவர்கிறது.

புதிய அலாய் வீல் டிசைனும் குரூஸ் காருக்கு புதுப்பொலிவை கொடுக்கிறது. பின்பக்க இருக்கைகளின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதால் கால்களை நீட்டி மடக்குவதற்கான இடவசதி மேம்பட்டிருக்கிறது.

புதிய 1.7 லிட்டர் விசிடிஐ எஞ்சினுடன் புதிய குரூஸ் வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் இந்த புதிய கார் 2.0 லிட்டர் விசிடிஐ எஞ்சினுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 163 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Saturday, March 10, 2012, 16:10 [IST]
English summary
American car maker General motors has launched facelifted version Cruze premium car in on going Geneva motor show. The new cruze equipped with 1.7 liter VCDI tech engine.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+