25ந் தேதி புதிய ஸ்பார்க்கை அறிமுகப்படுத்தும் செவர்லே
கடந்த 15ந் தேதி அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய ஸ்பார்க்கை வரும் 25ந் தேதி அறிமுகப்படுத்துகிறது செவர்லே.
புதிய ஆல்ட்டோ 800 காரை மாருதி அறிமுகப்படுத்தியதையடுத்து நேரடி போட்டியாளரான செவர்லே ஸ்பார்க் நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது. இதையடுத்து, மேம்படுத்தப்பட்ட அம்சங்கள் மற்றும் வடிவமைப்பில் சில மாறுதல்களுடன் புதிய ஸ்பார்க்கை களமிறக்குகிறது செவர்லே.

முன்பக்க கிரில், பனி விளக்குகள் உள்ளிட்டவை முன்பக்கத்தில் மாற்றங்கள் கண்டுள்ளன. இதுதவிர, உட்புறத்திலும் சில மாறுதல்களை புதிய ஸ்பார்க் பெற்றிருக்கிறது. இந்த நிலையில், வரும் வியாழக்கிழமை புதிய ஸ்பார்க் மார்க்கெட்டுக்கு வருகிறது.
எஞ்சினில் எந்த மாற்றமும் இருக்காது. 63 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் அதே 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்பார்க் வர இருக்கிறது. புதிய ஆல்ட்டோ வந்திருப்பதால் சவாலான விலையில் புதிய ஸ்பார்க்கை களமிறக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது செவர்லே.


Click it and Unblock the Notifications








