மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய தவேரா நியோ3: ஜிஎம் அறிமுகம்

Chevrolet Tavera
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புத்தம் புதிய தவேரா எம்பிவியை ஜெனரல் மோட்டார்ஸ் இன்று அறிமுகம் செய்துள்ளது.

நம் நாட்டு வர்த்தக பயணிகள் வாகன மார்க்கெட்டில் செவர்லே தவேராவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இந்த நிலையில், போட்டியை சமாளிக்கும் வகையில், தவேராவை கூடுதல் அம்சகளுடன் மேம்படுத்தியுள்ளது.

செவர்லே ஸ்பார்க் மற்றும் பீட் கார் மூலம் சிறிய கார் மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்து வைத்திருந்தாலும், வர்த்தக பயணிகள் வாகன சந்தையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு தவேரா முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறது.

தவேரா நியோ-3 என்ற பெயரில் வந்துள்ள புதிய தவேரா ஹெட்லைட் முதல் டேஞ்சர் லைட் வரை அனேக இடங்களில் கைவைத்து புதிய பொலிவை கொடுத்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். வெளிப்புறம் தவிர உட்புறத்திலும் ஏராளமான மாற்றங்கள் கண்டுள்ளது தவேரா.

மேலும், வசதிகேற்ப 6,7,8,9 மற்றும் 10 சீட்டர் மாடல்களில் தவேரா கிடைக்கும். தற்போது பிஎஸ்-3 மாசுக்கட்டுப்பாடு அம்சத்துடன் தவேரா வந்துள்ளது. இந்தநிலையில், பிஎஸ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்ட தவேராவின் எஞ்சின் வடிவமைப்பு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும், விரைவில் பிஎஸ்-4 மாடலும் களமிறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 7, 2012, 14:58 [IST]
English summary
The Chevrolet Tavera Ne0 3 which was unveiled the Delhi auto Expo has now been commercially launched with a starting price of Rs.6.72 lakhs. The entry level MPV from Chevrolet has seen some subtle design changes along with changes to the power train. The Tavera Neo 3 will now be available across all Chevrolet showrooms in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+