ஸ்பார்க்கைவிட குறைந்த விலையில் புதிய குட்டிக் கார்: செவர்லே தகவல்

Spark
செவர்லே பிராண்டில் ஸ்பார்க்கை விட குறைந்த விலையில் புதிய காரை குட்டிக் காரை களமிறக்க ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் செவர்லே பிராண்டின் கார் விற்பனை 11 சதவீதம் சரிந்துள்ளது. இதனால், தனது செவர்லே பிராண்டில் விற்பனை செய்ய்பட்டு வரும் கார் மாடல்களை முற்றிலும் மாற்றும் நடவடிக்கைகளை ஜெனரல் மோட்டார்ஸ் மேற்கொண்டிருக்கிறது.

யுவா ஹட்ச்பேக் காருக்கு மாற்றாக புதிய செயில் ஹேட்ச்பேக் காரை அடுத்த மாதம் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, பல புதிய மாடல்களை அந்த நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வருகிறது.

இதில், எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் மாடல் மினி ஸ்பார்க். செவர்லே பிராண்டில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களில் ஸ்பார்க்தான் விலை குறைந்த கார். சென்னையில் ரூ.3.20 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், இதை விட குறைந்த விலையில் புதிய குட்டிக் காரை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் சூசகமாக தெரிவித்துள்ளது. இந்த புதிய கார் ரூ.2.5 லட்சம் விலையில் வரலாம் என்று ஆட்டோமொபைல் வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் உள்ளிட்ட கார்களுக்கு இந்த புதிய குட்டிக் கார் நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும். மேலும், செயில் மற்றும் இந்த புதிய குட்டிக் கார்கள் மூலம் தனது விற்பனை எங்கோ போகப் போகிறது பாருங்கள் என ஜெனரல் மோட்டார்ஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

குட்டிக் கார் தவிர, ஈக்கோஸ்போர்ட், டஸ்ட்டர் போட்டியை கொடுக்கும் வகையிலான தனது புதிய டிராக்ஸ் காம்பெக்ட் எஸ்யூவியையும் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. தற்போது விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் இந்த புதிய மாடல்கள் வரும்போது செவர்லே விற்பனையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என ஜெனரல் மோட்டார்ஸ் மிகுந்த நம்பிக்கை தெரிவிக்கிறது.

More from DriveSpark

Article Published On: Friday, September 7, 2012, 10:21 [IST]
English summary
American car maker General motors is planning to launch new low cost car under Chevrolet spark in India. The company is also considering to launch the Trax compact suv in Indian market,reports said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+