புதிய மாற்றங்களுடன் வரும் புதிய செவர்லே ஸ்பார்க்

இதனால், ஸ்பார்க்கை தற்போது மெருகேற்றியுள்ளது ஜெனரல் மோட்டார்ஸ். ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைப்பு துறை வல்லுனர்களின் கைவண்ணத்தில் தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது ஸ்பார்க்.
புதிய ஸ்பார்க் தற்போது பல இடங்களில் சாலைகளில் இயக்கி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், டீசல் கார்களுக்கான மவுசு இந்திய மார்க்கெட்டில் பெருகி வருவதால் ஸ்பார்க் காரில் டீசல் எஞ்சினை பொருத்தியும் ஜெனரல் மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வரலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
ஜெனரல் மோட்டார்ஸ் கையில் 1.0 லிட்டர் ஸ்மார்ட்டெக் டீசல் எஞ்சின் இருக்கிறது. தற்போது பீட் காரில் இந்த டீசல் எஞ்சினை பொருத்திதான் விற்பனை செய்து வருகிறது. இதே எஞ்சினை புதிய ஸ்பார்க் காரிலும் பொருத்தும் வாய்ப்பு இருப்பதால்தான் இந்த எதிர்பார்ப்பு.
ஒரு வேளை டீசல் எஞ்சினுடன் ஸ்பார்க் விற்பனைக்கு வந்தால், நம் நாட்டு மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் குறைந்த விலை டீசல் கார் என்ற பெருமை ஸ்பார்க் காருக்கு கிடைப்பதோடு, விற்பனையும் நல்ல வளர்ச்சி பெறும் என்பது திண்ணம்.
மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் கார்களுக்கும் கடும் போட்டியை கொடுக்கும். தற்போது செவர்லே ஸ்பார்க் ரூ.3.29 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








