செவர்லே காம்பெக்ட் எஸ்யூவியை பார்வைக்கு விட்ட செவர்லே

அந்த வகையில் அமெரிக்க கார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் தனது செவர்லே பிராண்டில் புதிய மினி எஸ்யூவியை வடிவமைத்துள்ளது. ட்ராக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய மினி எஸ்யூவி ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் என்று தெரிகிறது.
இந்த புதிய எஸ்யூவியின் புகைப்படங்களை செவரல் வெளியிட்டுள்ளது. 4.2 மீட்டர் நீளம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய மினி எஸ்யூவி ஓபல் பிராண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மொக்கா எஸ்யூவியின் தழுவலில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய மினி எஸ்யூவி 1.4 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.7 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு விற்பனைக்கு வரும். 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது.
ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் அஸிஸ்ட், ஏபிஎஸ் உள்ளிட்ட தற்போதைய எண்ணற்ற தொழில்நுட்ப வசதிகளை இந்த மினி எஸ்யூவி வழங்கும். வடிவமைப்பிலும் அசத்துவதாக இருக்கிறது இந்த புதிய செவர்லே ட்ராக்ஸ். வரும் செப்டம்பரில் நடைபெற உள்ள பாரீஸ் மோட்டார் ஷோவில் இந்த புதிய மினி எஸ்யூவி பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications








