ஸ்விப்ட் போட்டியாளர் செவர்லே செயில் இன்டிரியர் முதல் பார்வை
ஸ்விப்ட்டுக்கு நேரடி போட்டி கொடுக்கும் வர இருக்கும் செவர்லே செயில் காரின் சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட இன்டிரியர் படங்கள் வெளியாகியுள்ளன. சீன மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் செயில் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், செவர்லே பிராண்டின் கேம் சேஞ்சர் காராக வரும் என்று கருதப்படுகிறது. செவர்லே செயிலின் இன்டிரியர் விபரங்களை காணலாம்.

டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் ஆகியவை தரமாகவும், கவர்ச்சியாகவும் தெரிகிறது
பீயேஜ் வண்ணத்துடன் கிரே கலரில் உட்புற பினிஷிங்குகள் செய்யப்பட்டுள்ளன.
குரோம் பூச்சுடன் கூடிய கதவு கைப்பிடிகள் அழகு சேர்க்கின்றன.
ஹேண்ட் பிரேக் லிவர் நுனியில் குரோம் பூச்சு மிளிர்கிறது
ஸ்டீயரிங் வீலில் குரோம் மற்றும் அலுமினிய பினிஷிங் இல்லை
டேஷ்போர்டில் நடுவில் இருக்கும் ஏசி வென்ட்டுகள் செவ்வக வடிவத்தையும், பக்கத்தில் இருக்கும் வட்ட வடிவமாகவும் உள்ளன.
பவர் வின்டோ பட்டன்கள் சென்ட்ரல் கன்சோல் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
செவர்லேயின் பிரத்யேக வடிவமைப்பு கொண்ட 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் கியர் லிவர்
1 டின் மியூசிக் சிஸ்டம்
கிளைமேட் கன்ட்ரோல் ஏசி இல்லை
டில்ட் அட்ஜெஸ்ட்டபிள் ஸ்டீயரிங் வீல்
சென்ட்ரல் கன்சோல் கீழே பொருட்களை வைக்கும் சிறிய இடவசதி
ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications








