தாய்லாந்தில் ட்ரெயில் பிளேஸர் அறிமுகம்: அடுத்தது இந்தியாவா?

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய பாடி வடிவமைப்பு டிசைனில் இந்த ட்ரெயில் பிளேஸர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதனால், பார்த்தவுடன் ஒரு கெத்தான தோற்றத்தை காட்டுகிறது.
4 சிலிண்டர் ட்யூராமேக்ஸ் டர்போ டீசல் எஞ்சினுடன் வரும் இந்த எஸ்யூவி 150 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 180 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல்களில் கிடைக்கும்.
முதலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மாடலும், பின்பு 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் மாடலுடன் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.
7 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த எஸ்யூவியின் இரண்டாவது வரிசை இருக்கை சற்று தாராள வசதியுடனும், மூன்றாவது வரிசை இருக்கை சற்று குறைவான இடவசதியையும் கொண்டிருக்கிறது.
இந்திய மார்க்கெட்டில் செவர்லே விற்பனை செய்து வரும் கேப்டிவா எஸ்யூவி ரூ.17 லட்சம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், புதிய ட்ரெயில் பிளேஸர் இதைவிட குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால், டொயோட்டோ இன்னோவாவுக்கு பெரிய போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் 15 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் ஏற்கனவே கூறியிருந்த மாடல்களில் ட்ரெயில் பிளேஸரும் ஒன்றாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








