இந்தியாவில் புதிய காம்பெக்ட் எஸ்யூவியை களமிறக்கும் செவர்லே
பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய டிராக்ஸ் மினி எஸ்யூவியை டிராக்கர் என்ற பெயரில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய செவர்லே திட்டமிட்டுள்ளது.
4.2 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும் டிராக்ஸ்(டிராக்கர்) காம்பெக்ட் எஸ்யூவி 5 பேர் பயணம் செய்யும் வசதிகொண்டதாக இருக்கும். ஓபல் மொக்கா எஸ்யூவியை ரீபேட்ஜ் செய்யப்பட்ட மாடலே டிராக்கர். ஐரோப்பிய மார்க்கெட்டில் இந்த ஆண்டு இறுதியில் டிராக்ஸ் விற்பனைக்கு வருகிறது.

மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலில் ஸ்டார்ட் ஸ்டாப் சிஸ்டம், எலக்ட்ராக்னிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட் ஆகியவை ஸ்டான்டர்டு அம்சங்களாக இருக்கும்.
விற்பனையில் சக்கை போடு போட்டு வரும் ரெனோ டஸ்ட்டர், விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய எஸ்யூவிகளுக்கு நேரடி போட்டியாளராக இருக்கும் டிராக்கர்.


Click it and Unblock the Notifications








