ஃபோர்டுக்கு போட்டியாக மினி எஸ்யூவி தயாரிக்கும் ஜெனரல் மோட்டார்ஸ்

Chevorlet Car
அமெரிக்க நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஃபோர்டு நிறுவனங்களுக்கு தங்களது தாயகத்தை தவிரவும், அனைத்து மார்க்கெட்டுகளிலும் பரம வைரிகளாகவே செயல்பட்டு வருகின்றன.

மேலும், ஒன்றையொன்று போட்டி போட்டுக் கொண்டு புதிய மாடல்களை வெளியிடுவதிலும் பெரும் யுத்தத்தையே நடத்தி வருகின்றன.

ஃபோர்டு நிறுவனம் விரைவில் புதிய ஈக்கோஸ்போர்ட் மினி எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருக்கும் நிலையில், போட்டிக்கு புதிய மினி எஸ்யூவியை தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

தற்போது செவர்லே பிராண்டில் விற்பனை செய்து வரும் கேப்டிவா எஸ்யூவியின் மினி மாடலாக புதிய எஸ்யூவியை காம்பெக்ட் மாடலாக வடிவமைக்கும் பணிகளை ஜெனரல் மோட்டார்ஸ் துவங்கிவிட்டது.

இதற்காக, காப்புரிமை பெறுவதற்கும் ஜெனரல் மோட்டார்ஸ் விண்ணப்பம் செய்து விட்டது. ஆல் வீல் டிரைவ் மாடலாக வருவதால் புதிய செவர்லே மினி எஸ்யூவி ஆப்ரோடு சாகசங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.

ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய மினி எஸ்யூவி மாடல்கள் விரைவில் இந்திய சாலைகளை கலக்க இருக்கும் நிலையில், செவர்லே மினி எஸ்யூவியும் வருவதால் கடும் போட்டி ஏற்படும் என்று கருதப்படுகிறது.

அதேவேளை, வடிவமைப்பு, தரம், விலை நிர்ணயம் ஆகியவற்றை பொருத்து புதிய மினி எஸ்யூவி மாடல்களின் எதிர்காலம் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Sunday, April 1, 2012, 10:48 [IST]
English summary
It is a well known fact that American carmakers General Motors and Ford are fierce competitors in many markets. India also is one such battleground where these two carmakers have been trying to overtake each other. The new point of altercation between Ford and General Motors' Chevrolet in India will be the compact SUV segment. Ford is the first among the two to have entered the compact SUV segment when it unveiled the EcoSport at the 2012 Delhi Auto Expo. Reports are now coming in that Chevrolet is in the process of building its own compact SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+