பாரத் ஸ்டேஜ்-4 அம்சத்துடன் புதிய தவேரா நியோ-3: ஜிஎம் அறிமுகம்
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் செவர்லே பிராண்டில் விற்பனை செய்து வரும் தவேரா எம்பிவி கார் மார்க்கெட்டில் முன்னிலை வகிக்கிறது.
பாரத் ஸ்டேஜ்-3 மாசுக்கட்டுப்பாட்டு அம்சத்தை கொண்டிருந்ததால், பாரத் ஸ்டேஜ்-4 விதி அமல்படுத்தப்பட்ட 13 முக்கிய நகரங்களில் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தவேராவின் விற்பனையில் பெரும் இழ்பபு ஏற்பட்டது.
இதையடுத்து, பாரத் ஸ்டேஜ்-4 மாசுக்கட்டுப்பாட்டு அம்சம் கொண்டதாக தவேராவை ஜெனரல் மோட்டார்ஸ் இன்று அறிமுகம் செய்துள்ளது. தவேரா நியோ-3 என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட மாடலாக வந்துள்ளது.
இந்த புதிய தவேராவில் 2.0 லிட்டர் காமன் ரயில் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 107 பிஎஸ் பவரையும், 264 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும்.
5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்ட மாடலாக வந்துள்ள புதிய தவேரா ஸ்டான்டர்டு, மேக்ஸ், எல்எஸ் மற்றும் எல்டி ஆகிய 4 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தவேரா ரூ.7.51 லட்சம் முதல் ரூ.10.34 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு புதிய தவேராவை வடிவமைத்ததாக ஜிஎம் தெரிவித்துள்ளது.
அதிக இடவசதி, சொகுசு அம்சங்களுடன் வந்துள்ள புதிய தவேரா நியோ-3 மார்க்கெட்டில் டொயோட்டோ இன்னோவா, மஹிந்திரா ஸைலோ, மாருதி எர்டிகா ஆகிய எம்பிவி கார்களுக்கு நெருக்கடியை தரும் என்று எதிர்பார்க்கலாம்.
(புதிய தவேராவை பல்வேறு கோணங்களில் காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்)


Click it and Unblock the Notifications









