சி3 ஹேட்ச்பேக் காரை ரகசிய சோதனை நடத்தியதா சிட்ரோவன்
சிட்ரோவன் சி3 பிரிமியம் ஹேட்ச்பேக் கார் சமீபத்தில் பெங்களூரில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், இந்த புதிய கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பிரான்சை சேர்ந்த பீஜோ-சிட்ரோவன் கூட்டணி மீண்டும் இந்தியாவில் கால் பதிக்க முடிவு செய்துள்ளது. குஜராத்தில் புதிய ஆலை கட்டவும் இந்த கூட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்த புதிய ஆலை திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆனால், இந்த கூட்டு நிறுவனம் எந்த ஒரு கார் மாடலையும் இந்தியாவில் சோதனை செய்ததாக தகவல்கள் இல்லை. இந்த நிலையில், சிட்ரோவன் சி3 பிரிமியம் ஹேட்ச்பேக் கார் சமீபத்தில் பெங்களூர் வெளிவட்ட சாலையில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிட்ரோவன் சமீபத்தில் அறிமுகம் செய்த மேம்படுத்தப்பட்ட புதிய மாடலான சி3 கார் பிரமியம் ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தது. வடிவமைப்பு, தரம் என அனைத்திலும் நிகரில்லாத இந்த கார் இந்தியாவில் ரகசிய சோதனை நடத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கார் ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. 72 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மற்றும் 118 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் ஆகிய இரண்டு பெட்ரோல் எஞ்சின் மாடல்களிலும், 91 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் எஞ்சின் மாடலிலும் இது விற்பனை செய்யப்படுகிறது.
எனவே, இந்தியாவிற்கு நிச்சயம் டீசல் மாடலிலும் வரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








