இந்த ஆண்டு சிட்டி டீசல் கார் இல்லை: ஹோண்டா திட்டவட்ட அறிவிப்பு

Honda City
நடப்பு ஆண்டில் சிட்டி டீசல் காரை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மிட்சைஸ் கார் செக்மென்ட்டில் கோலோய்ச்சு வரும் ஹோண்டா சிட்டி கார் தற்போது பெட்ரோல் மாடலில் மட்டுமே விற்பனையாகி வருகிறது. பிற நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் என இரண்டு மாடல்களில் விற்பனை செய்து வந்தாலும் ஹோண்டா சிட்டிதான் விற்பனையில் நம்பர் ஒன்னாக இருக்கிறது.

இந்த நிலையில், விற்பனை வளர்ச்சியை கூட்டும் விதமாக சிட்டி காரின் டீசல் மாடலை இந்த ஆண்டுக்குள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இது வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் வட்டாரங்களில் பெரும் ஆவலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், இந்தாண்டுக்குள் டீசல் சிட்டி காரை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவுமில்லை என்று ஹோண்டா கார் நிறுவனம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. டீசல் சிட்டி குறித்த எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும் அந்த நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.

ஹோண்டா சிட்டி டீசல் செய்தி பெரும் ஆவலை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஹோண்டாவின் அறிவிப்பு வாடிக்கையாளர் மத்தியில் சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்தி பாதிப்பால் பிரியோ மற்றும் ஜாஸ் கார்களின் வெயிட்டிங் பீரியட் கணிசமாக இருப்பதால் அதை குறைக்கும் முயற்சிகளில் ஹோண்டா தீவிரம் காட்டி வருகிறது.

எனவே, டீசல் சிட்டி காரின் அறிமுகம் செய்யும் திட்டத்தை ஹோண்டா ஒத்திப்போட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 1, 2012, 15:19 [IST]
English summary
Honda not to manufacture the Diesel version of City in 2012. Company Said no plans of a diesel version of Honda City especially in this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+