ஏலத்திற்கு வந்த நடிகை ஓட்டிய ஃபெராரி கார்: 25 கோடிக்கு போகுமாம்
ஹாலிவுட் படத்தில் பிரபல நடிகை பயன்படுத்திய ஃபெராரி கார் ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த கார் ரூ.25 கோடிக்கு ஏலம் போகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2003ம் ஆண்டு வெளிவந்த 'சார்லி'ஸ் ஏஞ்சல்ஸ்' என்ற ஹாலிவுட் படத்தில் ஃபெராரி 250ஜிடி எஸ்டபிள்யூபி கார் அதிகமாக பயன்படுத்தப்பட்டிருக்கும். படத்தின் ஹீரோயின் கேமரூன் டெய்ஸ் இந்த காரை வைத்து சாகச வித்தைகளை காட்டியிருப்பார்.

படத்தில் தனது வீர தீர சாகசங்களால் அனைவரையும் கவர்ந்த இந்த ஃபெராரி கார் விரைவில் ஏலம் விடப்பட உள்ளது. 1963ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த கார் முதலில் கிரே கலரில்தான் வாங்கியிருக்கிறார்கள். பின்னர், ஃபெராரி கார்களுக்குரிய சிவப்பு நிறத்திற்கு ரீப்பெயிண்டிங் செய்யப்பட்டது.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது கிரே கலரிலேயே இந்த கார் மாறியது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த காரை புத்தம் புதுசு போல் மாற்றும் பணிகள் துவங்கின. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கார் மீண்டும் புத்தம் புதுசுபோல் மாறியது.
இந்த காரில் 3.0 லிட்டர் வி12 எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 280 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்தது. மணிக்கு அதிகபட்சம் 149 கிலோமீட்டர் வேகம் செல்லும் இந்த கார் 0-60 கிமீ வேகத்தை வெறும் 8 விநாடிகளில் எட்டிப் பிடித்துவிடும்.


Click it and Unblock the Notifications








