இந்தியாவில் கான்கொஸ்ட் எவேட் ஆடம்பர எஸ்யூவி அறிமுகம்

கான்கொஸ்ட் எவேட்
ரூ.8 கோடி ஆரம்ப விலையில் எவேட் ஆடம்பர எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது கான்கொஸ்ட் நிறுவனம். இந்திய மார்க்கெட்டில் அதிக விலை கொண்ட எஸ்யூவி என்ற பெயரை கான்கொஸ்ட் எவேட் பெற்றுள்ளது.

கனடாவை சேர்ந்த கான்கொஸ்ட் நிறுவனம் கவச எஸ்யூவி தயாரிப்பில் புகழ்பெற்றது. இந்த நிறுவனத்தின் நைட் எக்ஸ்வி என்ற எஸ்யூவி உலக அளவில் ராணுவத்தினர் மத்தியில் மிக பிரபலம். அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன், சொகுசு வசதிகள் நிறைந்ததுதான் நைட் எக்ஸ்வி.

இந்த நிலையில், கவச வாகனத்துக்கான அம்சங்கள் இல்லாத தோற்றத்தில் மட்டும் கவச வாகனம் போன்ற எவேட் என்ற தனது முதல் ஆடம்பர எஸ்யூவியை கான்கொஸ்ட் தயாரித்துள்ளது. இந்த எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது கான்கொஸ்ட்.

நைட் எக்ஸ்வி போன்ற கவச வாகனத்துக்குரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லையென்றாலும், தோற்றத்தில் ராணுவத்தினர் பயன்படுத்தும் கவச வாகனம் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கிறது எவேட்.

எவேட் இலகு எடையும், அதிக உறுதியும் கொண்ட அலுமினியத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய வடிவமைப்பு கொண்ட இந்த எஸ்யூவியின் ஹெட்லைட், டெயில் லைட் ஆகியவை மாற்றம் கண்டிருக்கிறது.

மறுவடிவமைப்பு பெற்ற முன்பக்க கிரில், கூடுதல் அகலம் கொண்ட பின்பக்க கதவுகள் என அதிக மாற்றங்கள் எவேடில் கான்கெஸ்ட் செய்துள்ளது. கான்கொஸ்ட் எஸ்யூவியின் உட்புறம் லிமோசின் ரக கார்களை நினைவுபடுத்துகிறது. அதிக இடவசதி கொண்ட கான்கொஸ்ட் எவேடில் 4 கிங் சைஸ் இருக்கைகள் பொருத்தப்பட்டிருக்கின்றன. லேப்டாப் டிரே உள்ளிட்டவையும் இருக்கிறது.

ஸ்டீயரிங் வீல் உள்ளிட்டவை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. உட்புறம் அதிக சொகுசாகவும், ஆடம்பரமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் போன்று இருக்கைகள் உள்ளிட்டவை கை வேலைப்பாடுகளால் மிளிர்கின்றன.

கூரையில் பொருத்தப்பட்டிருக்கும் தேடும் வசதிகொண்ட லைட்டுகளை ஜாய்ஸ்டிக் மூலம் எந்த பக்கமும் திருப்பி ஃபோகஸ் செய்ய முடியும். இதில், இரவிலும் பொருட்கள் மற்றும் ஆட்கள் நடமாட்டத்தை கண்டறியும் நைட் விஷன் கேமரா முன்பக்கம், பின்பக்கமும் பொருத்தப்பட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் எப் 550யின் சூப்பர் ட்யூட்டி சேஸிஸ்தான் இந்த எஸ்யூவி கொண்டிருக்கிறது. பெட்ரோல் மற்றும் டீசல் மாடலில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த எஸ்யூவி ஆல் வீல் டிரைவ் வசதியுடன் வந்துள்ளது.

இந்திய மார்க்கெடட்டில் அதிகபட்சம் ரூ.2 கோடி வரையிலான விலையில் எஸ்யூவி ரக கார்கள் இருக்கின்றன. இந்த நிலையில், ரூ.8 கோடி விலையில் வந்திருக்கும் கான்கொஸ்ட் எவேட் எஸ்யூவிதான் இனி இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் அதிக விலை கொண்ட எஸ்யூவியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, August 20, 2012, 10:58 [IST]
English summary
Canada based luxury suv maker Conquest has launched Evade, its first unarmored sports utility vehicle in India. Priced at Rs. 8 crore (Ex showromm price), such an offering is quite strange from the company as they are actually known for their Knight XV armored SUV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+