கார் கடன் வட்டியை குறைத்த கார்ப்பரேசன் வங்கி

Car Loan
கார் கடன் வட்டி மற்றும் பிராசஸிங் கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது கார்ப்பரேசன் வங்கி. நாளை முதல் குறைந்த வட்டி அறிவிப்பு அமலுக்கு வருகிறது.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கார்ப்பரேசன் வங்கி, வாகன கடன் வழங்குவதில் முன்னிலை வகிக்கிறது. வாகன கடன் வழங்குவதில் கடும் போட்டி நிலவுகிறது. மேலும், வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால், வாகன கடன் வாங்கும் போக்கு குறைத்துவிட்டது.

இதனால், வங்கிகளின் சில்லறை கடன் வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கார் கடனுக்கான வட்டி விகிதத்தை கார்ப்பரேசன் வங்கி குறைத்திருப்பதாக அறிவித்துள்ளது.

5 ஆண்டுகள் திருப்பி செலுத்தும் வாகன கடன்களுக்கு 11.25 சதவீதமாகவும், வட்டியும், 7 ஆண்டுகள் வரை திருப்பி செலுத்தும் கடன் திட்டங்களுக்கு 12 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் 11.75 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக கார்ப்பரேசன் வங்கி தெரிவித்துள்ளது. இதுதவிர, பிராசஸிங் கட்டணத்திலும் சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வாடிக்கையாளர்களை கவர்வதோடு, இருதரப்பிலும் பெரும் பயனளிக்கும் கருதப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய வங்கியாக திகழும் பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் கார் கடன் வட்டியை குறைத்தது நினைவிருக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, August 31, 2012, 15:15 [IST]
English summary
Corporation bank has announced cut in car loan interest rates to 12% fro, 11.75% for 7 year tenure. The new rates of interest will be applicable from 1st september.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+