கார்களில் கருப்பு கண்ணாடிக்கு சுப்ரீம் கோர்ட் தடை

கருப்பு கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும் கார்களை பயன்படுத்தி ஏராளமான குற்றச் செயல்கள் நடைபெறுவதாக கூறி கார்களில் கருப்பு கண்ணாடிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவிஷேக் கோயங்கோ என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
விபச்சாரம், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றாவாளிகள் கருப்பு கண்ணாடிகள் பொருத்தப்பட்ட கார்களில் எளிதாக தப்பி விடுவதாகவும், எனவே மோட்டார் வாகன சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு கார்களின் கண்ணாடியில் கூலிங் பேப்பர் ஒட்டவேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச், கார்களில் கருப்பு உள்ளிட்ட கலர் பேப்பர் ஒட்டப்பட்ட கண்ணாடிகளை (டின்டட் கிளாஸ்)பொருத்துவதற்கு தடை விதித்துள்ளது.
மேலும், மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் கண்ணாடிகளில் கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்றும், மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளது.வரும் மே 4ந் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கண்ணாடியில் எவ்வளவு சதவீதம் சன் ப்லிம் ஒட்ட வேண்டும்:
மோட்டார் வாகன சட்டத்தின்படி கார்களின் முன்பக்க கண்ணாடி (வைன்ட் ஷீல்டு) 70 சதவீதம் ஒளி உள்ளே வரும் அளவுக்கு இருக்க வேண்டும்.30 சதவீதம் மட்டுமே ஒளி ஊடுருவதை தடுக்கும் வகையில் கலர் பேப்பர்களை ஒட்டவேண்டும்.
இதேபோன்று, பக்கவாட்டு கண்ணாடிகளில் 50 சதவீதம் அளவுக்கு வெளிச்சம் உள்ளே இருக்கும் அளவுக்குத்தான் கருப்பு அல்லது வேறு கலர் பேப்பர்களை ஒட்ட வேண்டும் என்று மோட்டார் வாகன சட்டம் கூறுகிறது.


Click it and Unblock the Notifications








