ரெனோ-நிசான் கூட்டணியில் கார் தயாரிக்க பென்ஸ் திட்டம்

ஜெர்மனியிலிருந்து வெளிவரும் பைனான்சியல் டைம்ஸ் டச்லேண்ட் வர்த்தக நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. ரினால்ட்-நிசான் கூட்டணியில் கார் எஞ்சின்களை தயாரிக்க ஏற்கனவே டெய்ம்லர் முடிவு செய்துள்ளது.
வரும் 2014ம் ஆண்டு முதல் இந்த நிறுவனங்கள் ஒப்பந்த அடிப்படையில் எஞ்சின் உற்பத்தியை துவங்கும் என தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில், கார்களையும் இணைந்து உற்பத்தி செய்வது குறித்து பென்ஸ் பரிசீலித்து வருகிறது.
வரும் 2016ம் ஆண்டு முதல் ரினால்ட்-நிசானுடன் இணைந்து மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு கார்களை தயாரிக்க டெயம்லர் முடிவு செய்திருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த ஆண்டு இறுதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பைனான்சியல் டைம்ஸ் டச்லேண்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








