6 புதிய டிரக் மாடல்களை களமிறக்கும் பாரத் பென்ஸ்

Benz Trucks
வரும் செப்டம்பரில் பாரத் பென்ஸ் பிராண்டில் 6 புதிய டிரக் மாடல்களை டெய்ம்லர் அறிமுகப்படுத்துகிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் தாய் நிறுவனமான டெய்ம்லர் டிரக் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் பாரத் பென்ஸ் என்ற பிரத்யேக பிராண்டில் டிரக்குகளை தயாரிக்க உள்ளது.

இதற்காக, சென்னை அருகே ரூ.4,400 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை கட்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த தொழிற்சாலை திறக்கப்பட்டது. ஆனால், உற்பத்தி இன்னும் துவங்கவில்லை.

இந்த நிலையில், இந்த ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, வரும் செப்டம்பரில் 6 புதிய டிரக் மாடல்களை அந்த நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.

நவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல இழுதிறன் கொண்ட மாடல்களில் வருவதால் நிச்சயம் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பாரத் பென்ஸ் உயரதிகாரி விஆர்வி பிரசாத் கூறுகையில்," வரும் செப்டம்பரில் 6 புதிய டிரக் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம். இவை 25 டன் இழுதிறன் கொண்டதாக இருக்கும்," என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, July 12, 2012, 10:36 [IST]
English summary
Daimler, the German parent company of Mercedes Benz and Bharath-Benz trucks has revealed plans to launch six new vehicles in India this year. Bharath-Benz, the commercial vehicle division of Daimler has a new manufacturing plant near Chennai which was inaugurated earlier this year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+