பென்ஸ் டிரக்குகள் விலை 10 சதவீதம் வரை கூடுதலாக இருக்கும்

வரும் செப்டம்பர் மாதம் 9ந் தேதி பாரத் பென்ஸ் பிராண்டில் இந்த புதிய டிரக்குகள் முறைப்படி விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளன. மொத்தம் 17 மாடல்களை ரக வாரியாக விற்பனைக்கு கொண்டு வருகிறது பாரத் பென்ஸ்.
சென்னையில் ரூ.4400 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ள ஆலையில் பாரத் பென்ஸ் டிரக்குள் தயாரிக்கப்பட உள்ளன. உள்நாட்டிலேயே அதிக உதிரிபாகங்களை பெற இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்ததால், பென்ஸ் டிரக்குகள் பிற நிறுவனங்களின் டிரக்குகளுக்கு போட்டியை கொடுக்கும் விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிற தயாரிப்புகளை விட பென்ஸ் டிரக்குகள் 5 முதல் 10 சதவீதம் விலை அதிகமிருக்கும் என்று அந்த நிறுவனமே தெரிவித்துள்ளது. கேபின் ஏசி, ஸ்மூத்தான கியர் பாக்ஸ் உள்ளிட்ட வசதிகள் பென்ஸ் டிரக்கில் இருக்கும் என்பதால் விலை கூடுதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதுகுறித்து பாரத் பென்ஸ் துணைத் தலைவர் விஆர்வி ஸ்ரீபிரசாத் கூறுகையில்," துவக்கத்தில் மற்ற டிரக்குகளை விட பென்ஸ் டிரக்குகள் விலை அதிகம் இருக்கும். இருந்தாலும், 15 சதவீதம் அளவுக்கு பென்ஸ் டிரக்குகள் கூடுதல் எரிபொருள் சிக்கனத்தை தரும்.
தவிர, அதிக வசதிகள் இருக்கும் என்பது மட்டுமின்றி பொருளாதார அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு பென்ஸ் டிரக்குகள் அதிக பயன் தரும்," என்றார்.


Click it and Unblock the Notifications








