ரூ.2 லட்சத்தில் தட்சன் பிராண்டில் புதிய கார்: நிசான் அறிவிப்பு

இந்தியா உள்ளிட்ட மாஸ் கார் மார்க்கெட்டுக்கு ஏற்ற வகையில் குறைந்த விலை கார்களை விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, சமீபத்தில் தனது தட்சன் பிராண்டை மீண்டும் அறிமுகம் செய்தது நிசான். மிகக்குறைந்த விலை கார்களை தனது பிராண்டில் அறிமுகம் செய்தால் மதிப்பு குறைந்துவிடும் என்று கருதி தட்சனை அறிமுகம் செய்வதாக நிசான் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், வரும் 2014ம் ஆண்டில் தட்சன் பிராண்டில் புதிய கார் மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக நிசான் தெரிவி்ததுள்ளது. ரூ.2 லட்சம் ஆரம்ப விலையில் புதிய கார் இருக்கும் என்றும் நிசான் தெரிவித்துள்ளது.
மேலும், தட்சன் பிராண்டில் வெளிவரும் கார்கள் அனைத்தும் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் விலைக்குள் இருக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதவிர, சிறிய ரக டீசல் எஞ்சினையும் தயாரிக்க இருப்பதாக நிசான் தெரிவித்துள்ளது.
டீசல் கார்களுக்கு அதிகரித்து வரும் தேவையை கருத்தில்க்கொண்டு, ஹேட்ச்பேக் காருக்கு பொருத்தும் வகையில் சிறிய ரக எஞ்சினை உருவாக்கி வருவதாகவும் நிசான் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








