டட்சன் பிராண்டில் 5 புதிய கார் மாடல்கள்: நிசான் திட்டம்
குறைந்த விலை கார்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட டட்சன் பிராண்டில் 5 புதிய கார் மாடல்களை நிசான் அறிமுகம் செய்ய உள்ளது.
இந்தியா, இந்தோனேஷியா உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்காக குறைந்த விலை கார்களை களமிறக்க நிசான் முடிவு செய்துள்ளது. ஆனால், தனது பிராண்டில் அறிமுகம் செய்தால் பிராண்டு மதிப்பு குறைந்து, வர்த்தகம் பாதிக்கும் என நிசான் கருதியது.

இதற்காக, ஏற்கனவே கைவிடப்பட்ட தனது டட்சன் பிராண்டை மீண்டும் அறிமுகம் செய்தது. கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதலாவதாக டட்சன் பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது. வரும் 2014ம் ஆண்டில் டட்சன் பிராண்டில் புதிய குட்டிக் காரை அறிமுகம் செய்ய இருப்பதாக நிசான் தெரிவித்திருந்தது.
டட்சன் பிராண்டில் முதலாவதாக 2 லட்சத்தில் புதிய கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய ஹேட்ச்பேக் கார் மாருதி ஆல்ட்டோ, ஹூண்டாய் இயான் உள்ளிட்ட கார்களுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் இருக்கும்.
இந்த நிலையில், டட்சன் பிராண்டில் மொத்தம் 5 கார்களை நிசான் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த வகை கார்கள் என்பதை அந்த நிறுவனம் தெரிவிக்கவி்ல்லை.
சிறிய ஹேட்ச்பேக் வருவது உறுதியாகியுள்ள நிலையில், ஒரு செடான், எஸ்யூவி கார் ஆகியவை டட்சன் பிராண்டில் வர இருப்பதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை விலையை குறைத்து களமிறக்க வேண்டும் என்பதால் சென்னையிலுள்ள நிசான் ஆலையிலேயே டட்சன் பிராண்டு கார்களும் உற்பத்தி செய்ய்பபட உள்ளன.


Click it and Unblock the Notifications








