இந்தியாவின் முதல் சூப்பர் காருக்கு சென்னையில் பி்ரம்மாண்ட ஷோரூம்

பிரபல கார் வடிவமைப்பு நிபுணரான திலீப் சாப்ரியா வடிவமைத்த இந்தியாவின் முதல் சூப்பர் காரை சமீபத்தில் நடந்த டெல்லி ஆட்டோ கண்காட்சியில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் அறிமுகம் செய்து வைத்தார்.
டிசி அவந்தி என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள் இந்த சூப்பர் கார் மற்ற சூப்பர் கார்களை ஒப்பிடும்போது மிக குறைவான விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனால், டிசி அவந்தி மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த நிலையில், டிசி அவந்தி சூப்பர் காருக்கு சென்னையில் பிரத்யேக ஷோரூம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக பிரபலமான லலிதா ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான லலிதா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த புதிய ஷோரூமை திறக்கிறது.
சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், 1.20 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பிரம்மாண்ட புதிய ஷோரூம் வரும் பிப்ரவரி 6ந் தேதி திறப்பு காண்கிறது. இந்த புதிய ஷோரூமில் டிசி அவந்தி கார் உள்பட திலீப் சாப்ரியாவின் டிசி கார் மறுவடிவமைப்பு நிறுவனத்தின் பல மாடல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.
மேலும், டிசி நிறுவனத்தின் 15 கார் மாடல்கள் இந்த புதிய ஷோரூம் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications