பல லட்சம் இன்னோவாவை சில லட்சங்களில் இப்படியும் மாற்றலாம்!
ரதம் போன்ற கார் என்ற பெருமை டொயோட்டா இன்னோவாவுக்கு உண்டு. எம்பிவி மார்க்கெட்டில் எத்தனையோ புதிய கார் மாடல்களை கொண்டு வந்து இறக்கினாலும் இன்றளவும் இன்னோவாவுக்கு நிகர் இன்னோவாதான் என்று கூற முடியும். இடவசதி, சொகுசு அம்சங்கள், அதிர்வுகள் இல்லாத பயண அனுபவம் என இன்னோவாவின் அம்சங்களை அடுக்கிச் செல்லலாம்.

முன் வரிசையில் மாற்றங்கள்
உயர்தர லெதர் இருக்கைகள், டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் என எங்கெங்கு காணினும் மாற்றங்கள்

பயணிகள் கம்பார்ட்மென்ட்
தனி அறை போலவே காட்சியளிக்கும் பின்புற கம்பார்ட்மென்ட்டில் 3 கிங் சைஸ் இருக்கைகள், எல்இடி டிவி, மேற்கூரையில் மெல்லிய ஒளியை உமிழும் விளக்குகள் என ஜொலிக்கிறது.

கூலர் பாக்ஸ்
கூலர் பாக்ஸ் ஒன்று பின்புறம் கொடுக்கப்பட்டுள்ளது. தவிர, சூட்கேஸ் உள்ளிட்டவற்றை வைக்கவும் தாராள இடவசதி இருக்கிறது.

லேப்டாப் டிரே
லேப்டாப் மற்றும் இதரப் பொருட்களை வைப்பதற்கு மடக்கி விரி்க்கும் வசதியுடன் கூடிய டிரே உள்ளது.
டிசி நிறுவனத்தின் கைவண்ணத்தில் உருவாகும் இன்னோவாவில் உள்ள அம்சங்கள் பற்றிய முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. முன்வரிசை இருக்கைக்கும், பின் வரிசை இருக்கைக்கும் இடையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டேஷ்போர்டு, சென்ட்ரல் கன்சோல் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. பின்புறத்தில் 3 கிங் சைஸ் இருக்கைகள் பொருத்தப்பட்டுள்ளது.
முன்வரிசை மற்றும் பின் வரிசையை பிரிக்கும் வகையில் அமைக்கப்ட்டிருக்கும் தடுப்பில், எல்இடி டிவி, மடக்கி விரிக்கும் வசதிகொண்ட லேப்டாப் டிரே ஆகியவை இருக்கிறது. டிவிக்கு கீழே பொருட்களை வைப்பதற்கான பெரிய டிரே கொடுக்கப்பட்டுள்ளது. மேற்கூரையில் மெல்லிய விளக்குள் பொருத்தப்பட்டு மனதை ரம்மியமாக்குகின்றன.
இருக்கைகள் உயர்ரக லெதர் மூலம் தைக்கப்பட்டு மெத் மெத்தென இருக்கிறது. ஒரு இருக்கையின் ஆர்ம் ரெஸ்ட்டிலேயே கன்ட்ரோல் ஸ்விட்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று இருக்கைகளுக்கு பின்னால் சிறிய ஃபிரிட்ஜ் ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. தவிர, சூட்கேஸ் உள்ளிட்டவற்றை வைக்கும் அளவுக்கு இடவசதி இருக்கிறது.
மொத்தத்தில் ஒரு 5 ஸ்டார் ஓட்டலின் அறையை நினைவூட்டுகிறது. இன்னோவா கார் வைத்திருக்கும் உரிமையாளர்கள் சென்னை பூந்தமல்லி சாலையில் உள்ள லலிதா டிசி நிறுவனத்திற்கு சென்றால் அதிக விபரங்களை பெற முடியும்.


Click it and Unblock the Notifications








