டெல்லியில் வழிவிடாத கார் டிரைவர் மீது துப்பாக்கியால் சுட்ட மர்ம கும்பல்!

டெல்லி புறநகர் பகுதியான நரேலா என்ற இடத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. நரேலா அருகிலுள்ள பிகேனரை சேர்ந்தவர் விஜேந்தர் கத்ரி. இவர் தனது ஐ10 காரில் நரேலா அருகில் வந்துகொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த ஸ்கார்ப்பியோ கார் வழி விடுவதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வந்ததாக தெரிகிறது. ஆனால்,சாலை குறுகலாக இருந்ததால் விஜேந்தர் வழி விடாமல் வந்ததாக தெரிகிறது.
சிறிது தூரம் கழித்து விஜேந்தர் வழிவிட்டுள்ளார். அப்போது, விஜேந்தர் காருக்கு குறுக்கே வந்து காரை நிறுத்திவிட்டு, அதிலிருந்து இறங்கிய 8 இளைஞர்கள் விஜேந்தருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாய்த் தகராறு முற்றிய நிலையில், அந்த இளைஞர்களில் ஒருவன் திடீரென மறைத்துவைத்திருந்த துப்பாக்கியை எடுத்து விஜேந்தர் காரை நோக்கி சுட்டுள்ளார்.
இதில், அதிர்ஷ்டவசமாக விஜேந்தர் காயமின்றி தப்பினார். மேலும், துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்துள்ளனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. இளைஞர்கள் துப்பாக்கியால் சுட்டதில் விஜேந்தர் காதை உரசிக்கொண்டு சென்ற துப்பாக்கி தோட்டா காருக்குள் சிறிய சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜேந்தர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழிவிடாததற்காக ஆத்திரமடைந்து துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








