எந்த தடையும் இல்லாமல் டாப் கியரில் யூஸ்டு கார் மார்க்கெட்!

புதிய கார் மார்க்கெட்டுக்கும் யூஸ்டு கார் மார்க்கெட் வளர்ச்சிக்கும் 5 முதல் 7 சதவீதம் வித்தியாசம் இருக்கும். பெட்ரோல் விலை, கார் கடன் வட்டி உயர்வு ஆகிய காரணங்களால் புதிய கார் மார்க்கெட் விற்பனை எதிர்பார்த்த வளர்ச்சியை பெறவில்லை.
அதேவேளை, யூஸ்டு கார் மார்க்கெட் மேற்கண்ட காரணங்களால் குறைந்த அளவு பாதிப்போடு, ஓரளவு நல்ல வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்க்கெட்டில் புதிய கார் மாடல்கள் வந்துகொண்டே இருப்பதால் பழைய காரை விற்றுவிட்டு புதிய கார் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது.
இதன்மூலம், குறைந்த விலையில் பயன்படுத்தப்பட்ட கார்கள் கிடைப்பதால் யூஸ்டு கார் மார்க்கெட்டின் வளர்ச்சி சீராக செல்கிறது. இதுகுறித்து மஹிந்திரா நிறுவன உயரதிகாரி ராஜீவ் துபே கூறுகையில்,"நடப்பு ஆண்டில் பயன்படுத்தப்பட்ட கார் மார்க்கெட் 15 முதல் 17 சதவீத வளர்ச்சியை பெறும் வாய்ப்பு உள்ளது,"என்று கணிப்பு கூறியுள்ளார்.
நடப்பாண்டில் அங்கீகரிக்கப்பட்ட யூஸ்டு கார் மார்க்கெட் 11 சதவீத வளர்ச்சியை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கார் மார்க்கெட் வெறும் 3 முதல் 4 சதவீத வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்யும் என்று ஆட்டோமொபைல் துறை கணிப்புகள் கூறுகின்றன.


Click it and Unblock the Notifications








