2 லட்சம் ஹிட்டுகளை அள்ளிய தனுஷின் புதிய 'கொலவெறி'!

Tata Nano
டாடா நானோ காருக்காக நடிகர் தனுஷ் பாடிய புதிய கொலவெறி ஸ்டைல் பாடலின் வீடியோ இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் 3 படத்துக்காக பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் குறுகிய காலத்தில் யூடியூபில் பல லட்சம் பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. நாடு முழுவதும் தனுஷுக்கு பெரிய அளவில் அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. இதனால், அவருக்கு பாலிவுட்டிலிருந்தும் தற்போது வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், கொலவெறி ஸ்டைலில் புதிய பாடல் ஒன்றை டாடாநானோ காருக்காக பாடி, நடித்துள்ளார் தனுஷ். கொலவெறி பாடல் தமிங்கிலிஷில் வந்த நிலையில், நானோ காருக்காக தனுஷ் பாடியிருக்கும் அசத்தலான பாடல் தமிழ் மற்றும் இந்தி கலந்த கலவையாக எழுதப்பட்டுள்ளது.

கொலவெறி பாடல் போன்றே இந்த பாடலுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை இந்த வீடியோ பெற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதன்மூலம், நானோ காரின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் பார்வை மாறுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Article Published On: Thursday, August 16, 2012, 10:46 [IST]
English summary
Actor Dhanush's new Kolaveri style song for Tata Nano, is huge success in internet. The new song is getting 2,00,000+ views within few days.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+