பெட்ரோல் கார்களை விற்பனையில் விஞ்சிய டீசல் கார்கள்: இதுவே முதன்முறை

காலம் காலமாக பெட்ரோல் கார்களின் ஆதிக்கம்தான் மார்க்கெட்டில் நீக்கமற நிறைந்திருந்தது. கடந்த ஆண்டு பெட்ரோல் விலை தாறுமாறாக உயரத்துவங்கியதும் டீசல் கார்கள் மீது வாடிக்கையாளர் கவனம் திரும்பியது.
இதனால், டீசல் கார்களின் விற்பனை வெகுவேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும், மாருதி ஸ்விப்ட், ஹூண்டாய் வெர்னா, மஹிந்திரா எக்ஸ்யூவி ஆகிய டீசல் கார்களுக்கு நீண்ட க்யூ காத்திருக்கிறது. இந்த கார்களுக்கு 3 முதல் 6 மாதங்கள் வரை வெயிட்டிங் பீரியட் நீடிக்கிறது.
மேலும், கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரையிலான மொத்த கார் விற்பனை புள்ளிவிபரங்களை அலசினால் பெட்ரோல் கார் விற்பனை 15 சதவீதம் குறைந்துள்ளது. டீசல் கார்களின் விற்பனை 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இந்த ஆண்டு பெட்ரோல் கார்களின் மார்க்கெட் பங்களிப்பு கணிசமாக குறையும் என்று ஆருடங்கள் கூறுகின்றன. அதிகம் விற்பனயாகும் ஆல்ட்டோ, ஹூண்டாய் ஐ10 கார்களின் விற்பனையும் இந்த ஆண்டு எதிர்பார்த்த இலக்கை எட்டுவது கடினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ஸ்விப்ட், ரிட்ஸ் உள்ளிட்ட கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மார்க்கெட்டில் டீசல் கார்களுக்கு இருக்கும் தேவையை கருத்தில்க்கொண்டு, பல்வேறு கார் நிறுவனங்களும் புதிய டீசல் எஞ்சின் உற்பத்தி ஆலைகளை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளன.
குர்கானில் மாருதி ரூ.1,700 கோடி முதலீட்டில் புதிய டீசல் எஞ்சின் ஆலையையும், ஹூண்டாய் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் புதிய டீசல் எஞ்சின் ஆலையையும் கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளன.


Click it and Unblock the Notifications








