விற்பனை மந்தம்: டீசல் கார்களுக்கும் சலுகைகள் வழங்கும் கார் நிறுவனங்கள்

Diesel Cars available at discounts
கார் விற்பனை மந்தமடைந்துள்ளதால் டீசல் கார்களுக்கும் முன்னணி நிறுவனங்கள் சலுகைகளை வழங்குவதாக தெரிவித்துள்ளன.

பெட்ரோல் கார் விற்பனை சரிந்ததால் சலுகைகள் அறிவிக்கப்படுவது வழக்கமாகியிருக்கிறது. ஆனால், டீசல் கார்களுக்கு நிலவும் கடும் டிமான்ட் காரணமாக வாடிக்கையாளர்கள் சலுகைகள் பற்றி நினைத்துக் கூட பார்க்காத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில், கடந்த மாதம் கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது கார் நிறுவனங்களை யோசிக்க வைத்துவிட்டது. இதனால், தற்போது பல முன்னணி நிறுவனங்கள் டீசல் கார்களுக்கும் சலுகைகளை வழங்குவதாக அறிவித்துள்ளன.

டாடா இண்டிகா, போக்ஸ்வேகன் போலோ, ஃபோர்டு ஃபிகோ, மாருதி ரிட்ஸ், எஸ்எக்ஸ்4, ஃபியட் புன்ட்டோ, நிசான் மைக்ரா மற்றும் மஹிந்திரா வெரிட்டோ ஆகிய கார்களின் டீசல் மாடல்களுக்கு ரூ.50,000 வரை தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

ஃபோர்டு தலைவர் மைக்கேல் போனிஹம் கூறுகையில்,' தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி, டீசல் கார்களின் விற்பனையும் கணிசமாக சரிந்து வருகிறது. சந்தை போட்டி காரணமாக டீசல் மாடல்களுக்கும் தள்ளுபடி மற்றும் இதர சலுகைகளை வழங்குகிறோம்," என்றார்.

எனவே, டீசல் கார் வாங்கப் போகும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு டீசல் காருக்கும் எவ்வளவு சலுகைகள் கிடைக்கும் என்பதை டீலர்களில் தெரிந்து கொண்டு ஒப்பீடு செய்து வாங்குவது சாலச் சிறந்தது.

More from DriveSpark

Article Published On: Monday, September 10, 2012, 16:02 [IST]
English summary
The long waiting period and premium pricing for diesel cars are becoming history on weak consumer sentiment. In fact many diesel variants are now available off the shelf at discounts.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+