டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் புற்றுநோய் ஆபத்து!

Diesel SUV
டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையை சுவாசிக்கும் மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு(டபிள்யூஎச்ஓ)வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது.

டீசல் வாகனங்களால் சுற்றுச் சூழலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். இந்த நிலையில், டீசலில் இயங்கும் வாகனங்கள் வெளியிடும் புகையால் நுரையீரலுக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பின் அங்கமாக செயல்படும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கங்களில் பணியாற்றுபவர்கள், ரயில்வேயில் பணிபுரிபவர்கள், டிரக் டிரைவர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மற்றவர்களை விட டீசல் புகையை சுவாசிக்க வேண்டிய கட்டாயத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு நுரையீரல் சம்பந்தமான நோய்களும், புற்றுநோயும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆய்வுக்கு தலைமை வகித்த கிறிஸ்டோபர் போர்ட்டியர் கூறுகையில்,"இதுகுறித்து விழிப்புணர்வை பணியாளர்களிடத்தில் ஏற்படுத்துவது அவசியம். டீசல் மூலம் வெளியேறும் புகையை சுவாசிப்பதை கூடுமான வரை பணியாளர்கள் தவிர்க்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

More from DriveSpark

Article Published On: Friday, June 15, 2012, 14:36 [IST]
English summary
Diesel fuel is a carcinogenic, the International Agency for Research on Cancer, part of the World Health Organization, said on Tuesday. The exhaust fumes from diesel fuel can cause deadly lung cancer.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+