டீசல் ஐ20, வெர்னா கார்களின் வெயிட்டிங் பீரியட் குறைகிறது
தேவை அதிகரித்துள்ளதால் ஐ20 மற்றும் வெர்னா டீசல் கார் உற்பத்தியை 50 சதவீதம் உயர்த்தியுள்ளது ஹூண்டாய். இதனால், வெயிட்டிங் பீரியட் வெகுவாக குறையும்.
பெட்ரோல் விலை உயர்வால் டீசல் கார்களுக்கு டிமான்ட் அதிகரித்துள்ளது. இதனால், டீசல் கார் உற்பத்திக்கு அனைத்து நிறுவனங்களும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
அந்த வகையில், நாட்டின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளரான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனமும் டீசல் கார் உற்பத்தியை அதிரித்துள்ளது.
கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ப்ளூயிடிக் ஐ20 மற்றும் ஆல் நியூ வெர்னா கார்களின் டீசல் மாடல்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது. மாதம் சராசரியாக 7000 ஆக இருந்த இரண்டு கார்களின் விற்பனை அதிகரித்து 10,500 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
எனவே, இந்த இரண்டு கார்களின் டீசல் மாடல்களின் உற்பத்தியை இந்த மாதம் முதல் 50 சதவீதம் அளவுக்கு உயர்த்தி இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இதற்காக, தென்கொரியாவிலிருந்து டீசல் எஞ்சின் இறக்குமதியையும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications









