புனேயில் டீசல் நானோ சோதனை ஓட்டம்: கேமராவில் சிக்கியது

Diesel Nano
டீசல் நானோ குறித்து எந்தவொரு தகவலையும் டாடா வெளியிடாத நிலையில், புனே அருகில் டீசல் நானோ சோதனை நடத்தப்பட்டபோது கேமராவில் சிக்கியுள்ளது.

டீசல் நானோ குறித்து இதுவரை எந்த தகவலையும் வெளியிடாமல் படுரகசியம் காத்து வருகிறது டாடா மோட்டார்ஸ். ஆனால், டீசல் நானோ லிட்டருக்கு 40 கிமீ செல்லும் என்ற தகவல் மட்டும் வெளியில் கசிந்துவிட்டது.

இதனால், டீசல் நானோ மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் டீசல் நானோ பார்வைக்கு வைக்கப்படும் என்ற எதிர்பார்த்த நிலையில், சிஎன்ஜியில் இயங்கும் நானோ கார் கான்செப்ட்டை மட்டும் வைத்து ஏமாற்றியது டாடா.

இந்த நிலையில், புனே சுற்று வட்டாரப் பகுதியில் டீசல் நானோவை ரகசியமாக சோதனை செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். இதை ஆங்கில ஆட்டோமொபைல் இணையதள வாசகர் ஒருவர் படம் பிடித்துள்ளார்.

தற்போதுதான் முதல்முறையாக டீசல் நானோ கேமரா கண்களில் சிக்கியுள்ளது. எனவே, டீசல் நானோவை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்வது உறுதியாகியுள்ளது.

700சிசி டீசல் எஞ்சினுடன் வரும் டீசல் நானோ லிட்டருக்கு 40 கிமீ செல்லும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதில், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் இருக்கும் என்பதால் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 600 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.

இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்திலோ டீசல் நானோ விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 9, 2012, 16:59 [IST]
English summary
Diesel Nano is much awaited car model from Tata motors has tested near Pune and first time clicked in Camera eyes. The diesel nano scooped it will give 40 km mileage per liter. The car expected to launch in end of the year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+