டீசல் விலை விரைவில் உயர்வு: கலக்கத்தில் கார் மார்க்கெட்

குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த கையோடு டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கார் விற்பனையில் மேலும் சரிவு காணும் என ஆட்டோமொபைல் துறை அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு, கார் கடன் வட்டி அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் என அனைத்து விதங்களிலும் கார் மார்க்கெட் வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை விண்ணை முட்டுவதால் டீசல் கார் விற்பனைதான் ஓரளவு கார் மார்க்கெட் வளர்ச்சியை தூக்கி நிறுத்தி வருகிறது.
டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவலால், கார் மார்க்கெட்டுக்கு மீண்டும் தலைவலி உண்டாகும் என கருதப்படுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியாளர் சங்கம் ஏற்கனவே கார் விற்பனை வளர்ச்சி இலக்கை நிலவரத்துகக்கு தக்கவாறு அவ்வப்போது குறைத்து அறிவித்து வருகிறது.
டீசல் விலை உயர்த்தப்பட்டால் மீண்டும் வளர்ச்சி இலக்கை மாற்ற வேண்டியதிருக்கும் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். மேலும், பண்டிகை காலத்தில் கார் விற்பனை ஏற்றம் பெறும் என்று கருதப்படும் நிலையில், டீசல் விலை உயர்த்தப்பட்டால் நிச்சயம் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கலக்கத்தில் இருக்கின்றன கார் நிறுவனங்கள்.


Click it and Unblock the Notifications








