கிராஷ் டெஸ்ட்டில் ரெனோ டஸ்ட்டருக்கு 3 ஸ்டார் ரேட்டிங்

புதிய கார்கள் விற்பனைக்கு வரும்போது அதன் பாதுகாப்பு அம்சங்களை சோதிக்கும் வகையில் கிராஷ் டெஸ்ட் நடத்தப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் விற்பனைக்கு வந்துள்ள புதிய டஸ்ட்டர் எஸ்யூவிக்கு ஐரோப்பாவை சேர்ந்த என்சிஏபி அமைப்பு பாதுகாப்பு தர சோதனை நடத்தியது.
இதில், ரினால்ட் டஸ்ட்டர் எஸ்யூவிக்கு 3 ஸ்டார் ரேட்டிங் கிடைத்திருக்கிறது. பயணிகள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, பாதசாரிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் நிலை, கட்டுமான தரம் என அனைத்து அம்சங்கள் குறித்தும் சோதித்து பார்க்கப்பட்டது.
இவை அனைத்திலும் வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் 3 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது. ஏபிஎஸ், இபிடி, ஏர்பேக்குகள் உள்ளிட்டவை இருந்தாலும், கட்டுமான விஷயத்தில் சிறிது ரினால்ட் சமாதானப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது.
இதனால், கிராஷ் டெஸ்ட்டில் டஸ்ட்டர் 3 ஸ்டார் மட்டுமே தர வரிசையில் பெற்றுள்ளது சிறிது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது


Click it and Unblock the Notifications








