விற்பனையில் ஸ்கார்ப்பியோவை பின்னுக்குத் தள்ளிய டஸ்ட்டர்

Scorpio Duster
அறிமுகம் செய்யப்பட்டு மூன்றே மாதங்களில் மஹிந்திராவின் வெற்றிகரமான மாடலான ஸ்கார்ப்பியோவின் விற்பனையை விஞ்சியிருக்கிறது ரெனோ டஸ்ட்டர்.

இந்திய மார்க்கெட்டில் மூன்று கார்களை அறிமுகம் செய்த பின்னரும் ரெனோ குறிப்பிடத்தக்க இடத்தை பிடிக்க முடியாமல் திணறி வந்தது. கடந்த ஜூலை வரை இந்த நிலைமைதான். ஆனால், டஸ்ட்டர் ஜூலை மாதம் வந்தபின் ரினோவின் நிலைமை தலைகீழாகிவிட்டது.

ஆம், டஸ்ட்டர் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு மூன்று மாதங்களில் மஹிந்திராவின் வெற்றிகரமான ஸ்கார்ப்பியோவின் விற்பனையை விஞ்சியிருக்கிறது. அறிமுகமான முதல் மாதத்தில் 1,194 டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனையானது. அதே மாதத்தில் 4378 ஸ்கார்ப்பியோ கார்கள் விற்பனையானது.

ஆகஸ்ட்டில் 3184 டஸ்ட்டர் எஸ்யூவி விற்பனையான நிலையில், 4,204 ஸ்கார்ப்பியோ கார்கள் விற்பனையாகி இருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் ஸ்கார்ப்பியோ விற்பனையை டஸ்ட்டர் விஞ்சியது. கடந்த மாதம் 4211 டஸ்ட்டர் எஸ்யூவி கார்கள் விற்பனையான நிலையில், மஹிந்திரா நிறுவனம் 4,064 ஸ்கார்ப்பியோ கார்களை விற்பனை செய்துள்ளது.

அடுத்து வரும் மாதங்களில் டஸ்ட்டர் விற்பனைக்கும், ஸ்கார்ப்பியோ விற்பனைக்கும் பெரிய இடைவெளி ஏற்படும் என்பதையே இது காட்டுவதாக ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

டஸ்ட்டரின் ஆர்எக்ஸ்இ வேரியண்ட் ரூ.8.39 லட்சத்திலும், ஸ்கார்ப்பியோவின் எல்எக்ஸ் வேரியண்ட் ரூ.8.35 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று, டஸ்ட்டரின் ஆர்எக்ஸ்இசட்(ஓ)110 டாப் வேரியண்ட் ரூ.11.69 லட்சத்திலும், ஸ்கார்ப்பியோ2 வீல் டிரைவ் விஎல்எக்ஸ் டாப் வேரியண்ட் ரூ.10.80 லட்சத்திலும் விற்பனை செய்யப்படுகிறது.

சிறந்த கட்டுமானம், புதிய வடிவமைப்பு, நன் மதிப்பை பெற்ற டீசல் எஞ்சின் ஆகியவை டஸ்ட்டர் பக்கம் வாடிக்கையாளர்களை திரும்ப வைத்துள்ளது. இந்த நிலையில், ஸ்கார்ப்பியோ விற்பனையை தக்க வைக்க புதிய மாடலை மஹிந்திரா உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, October 5, 2012, 17:45 [IST]
English summary
French car maker Renault’s Duster compact SUV has managed to overtake the Mahindra Scorpio in terms of sales in September.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+