இந்தியாவுக்கு புதிய காம்பெக்ட் எஸ்யூவி: போக்ஸ்வேகன் அறிவிப்பு
ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய எஸ்யூவி ரக கார்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும் வகையிலான புதிய காம்பெக்ட் எஸ்யூவியை களமிறக்கப்போவதாக போக்ஸ்வேகன் அறிவித்துள்ளது.

போலோ, வென்ட்டோ கார்கள் மட்டுமே போக்ஸ்வேகன் விற்பனையில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. 2 மாடல்கள் மட்டுமே முக்கியத்துவம் பெற்றிருப்பதால் அந்த நிறுவனத்தின் வி்ற்பனை எதிர்பார்த்த வளர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில், விற்பனையை அதிகரிக்க புதிய கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு போக்ஸ்வேகன் திட்டமிட்டுள்ளது.
அப் என்ற புதிய ஹேட்ச்பேக் காரை போக்ஸ்வேகன் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதைத்தொடர்ந்து, புதிய காம்பெக்ட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த இருப்பதாக போக்ஸ்வேகன் தெரிவித்துள்ளது.
புதிய எஸ்யூவி 2 வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் கொண்ட மாடல்களில் கிடைக்கும். இந்த புதிய எஸ்யூவி நிறைந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். டிஎஸ்ஜி தொழில்நுட்பம் கொண்ட கியர் பாக்ஸ் மாடலில் வர இருக்கிறது.
இந்த புதிய கியர் பாக்ஸ் டிரைவிங்கின்போது பரவச அனுபவத்தை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனோ டஸ்ட்டர், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய காம்பெக்ட் எஸ்யூவி கார்களுக்கு இது நேரடி போட்டியை கொடுக்கும்.
அடுத்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2014ம் ஆண்டிலோ இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








