போக்குவரத்து நெரிசலுக்கு குட்பை சொல்ல வரும் புதிய எலக்ட்ரிக் கார்

Premier Rio
அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் கோழிமுட்டை வடிவில் ஓர் எலக்ட்ரிக் காரை வடிவமைத்து அசத்தியுள்ளனர். எதிர்கால போக்குவரத்தில் இந்த கார் மிக முக்கிய பங்கு வகிக்கும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எக்கசுஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த காரில் ஒருவர் மட்டுமே பயணிக்கலாம். இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 40 கிமீ வேகம் செல்லும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60கிமீ தூரம வரை செல்லலாம்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் இந்த காரில் எளிதாக செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சாதாரண கார் நிறுத்தும் இடத்தில் 6 எக்கசூஸ் எலக்ட்ரிக் கார்களை நிறுத்த முடியும்.

5,000 டாலர் விலையில் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. ஆர்டர் செய்து இந்த காரை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிய நிறுவனங்களில் ஒரு கட்டிடத்திலிருந்து மற்றொரு கட்டிடத்திற்கு செல்வதற்கு முதலில் பயன்படுத்தும் வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது. சாதாரண சாலைகளில் செல்வதற்கான பாதுகாப்பு வசதிகள் செய்தபின் பின்னர் நகர்ப்புற போக்குவரத்திற்காகவும் இந்த கார் விற்பனை செய்யப்பட உள்ளது.

மேலும், அடுத்த ஆண்டு 2 பேர் பயணிக்கும் வசதிகொண்ட எக்கசூஸ் மாடலையும் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்த காரை வடிவமைத்துள்ள நிறுவனம் தெரிவி்த்துள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தவும் சிறப்பாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 31, 2012, 12:56 [IST]
English summary
Designers from San Diego introduced an electric car in the shape of an egg, and that can move easily through heavy traffic.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+