போலரிஸ் கூட்டணியில் புதிய குட்டிக் காரை தயாரிக்க ஐஷர் ஆயத்தம்

Polaris Off Roader
புதிய குட்டிக் கார் உள்பட தனி நபர் பயன்பாட்டுக்கு ஏற்ற வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை தயாரிப்பதற்காக போலரிஸ் நிறுவனத்துடன் ஐஷர் கூட்டணி அமைத்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த போலரிஸ் நிறுவனம் ஆஃப் ரோடு வாகனங்கள் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமானது. இதேபோன்று நாட்டின் பழம்பெரும் நிறுவனங்களில் ஒன்றான ஐஷர் வர்த்தக வாகன தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. ஐஷரின் கீழ்தான் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கார் உள்ளிட்ட தனிநபர் பயன்பாட்டு வாகனங்களை தயாரிப்பதற்காக போலரிஸ் நிறுவனத்துடன் ஐஷர் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. 50:50 சதவீத அடிப்படையில் இந்த கூட்டணி நிறுவனம் செயல்பட உள்ளது.

சிறிய கார், ஆஃப் ரோடு வாகனங்கள் மற்றும் ஆஃப் ரோடு பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களை இந்த கூட்டணி நிறுவனம் தயாரிக்கும். மேலும், பஜாஜ் ஆட்டோவின் ஆர்இ60, டாடா நானோவுக்கு போட்டியாக சிறிய நான்கு சக்கர வாகனம் போன்ற குட்டிக் காரை தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளன.

வாகன தயாரிப்புக்காக புதிய ஆலையை கட்டவும் இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. உள்நாட்டு மார்க்கெட் உள்பட தனது தயாரிப்புகளை வளரும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 26, 2012, 12:33 [IST]
English summary
Country's leading commercial vehicle maker Eicher Motors and American Off road vehicle manufacturer Polaris Industries Inc have just signed a 50:50 partnership in order to develop personal vehicles for emerging markets.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+