எலக்ட்ரிக் வாகன விற்பனை இரட்டிப்பாகும்: உற்பத்தியாளர்கள் நம்பிக்கை

Reva
மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மூலம் எலக்ட்ரிக் வாகன விற்பனை இரட்டிப்பாகும் என உற்பத்தியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எலக்ட்ரிக் வாகன விற்பனை ஊக்குவிப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு கடந்த மார்ச் மாதம் காலாவாதியானது. மானியம் இல்லாததால் வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் கார் மற்றும் பைக்குகளை வாங்க முன்வரவில்லை.

இதனால், எலக்ட்ரிக் வாகன விற்பனை முற்றிலும் சரிந்தது. இந்த நிலையில், எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொலைநோக்கு திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இதற்காக, ரூ.23,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

அடுத்த ஓரிரு மாதங்களில் இந்த திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வர உள்ளது. எலக்ட்ரிக் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் வழங்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. அடுத்த 8 ஆண்டுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும். வரும் 2020ம் ஆண்டு வரையிலும் 60 லட்சம் வாகனங்களை விற்பனை செய்வதை இலக்காக கொண்டு இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன விற்பனை ஊக்குவிப்பு திட்டத்துக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதற்கு எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த நிதி ஒதுக்கீடு எலக்ட்ரிக் வாகன விற்பனை இரட்டிப்பாகும் என தெரிவித்துள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 1, 2012, 12:10 [IST]
English summary
The announcement of Rs 23,000 crore National Electricity Mobility Plan, to push sale of electrical vehicles by the central government, will bring much needed respite to manufacturers who have seen sales plummet by 75% since April when cash incentive to end-users (buyers of electric or hybrid vehicle) expired.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+