எர்டிகாவுக்கு அடுத்து ஏ-ஸ்டார், ரிட்ஸ்: மாருதியின் அடுத்த அஸ்திரங்கள்

இந்த ஆண்டின் மாருதியின் முக்கிய மாடலான எர்டிகா நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஏ-ஸ்டார் ஹேட்ச்பேக் காரின் செடான் வெர்ஷன் மற்றும் புதிய ரிட்ஸ் ஆகிய மாடல்களை மாருதி களமிறக்க உள்ளது.

ஸ்விப்ட் வெயிட்டிங் பீரியட் சுமையை குறைத்துக்கொள்ள புதிய ரிட்சை மாருதி அடுத்து அறிமுகம் செய்ய இருக்கிறது. பல புதிய அம்சங்களுடன் ஏ-ஸ்டார் செடான் கார் வரும் என்பதால் பலத்தை எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Maruti A-Star

இதனிடையே, டிசையருக்கும், எஸ்எக்ஸ்-4 காருக்கும் இடைபட்ட ரகத்தில் மாருதி நிறுவனம் புதிய கார் மாடலை விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாக கூறியிருந்தோம். அது தற்போது ஏ-ஸ்டார் ஹேட்ச்பேக் பிளாட்பார்மில் வடிவமைக்கப்படும் செடான் கார் என்று தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய செடான் காரை விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டுள்ளது. மிட்சைஸ் கார்களுக்கு குறைவான விலையில் வரும் புதிய ஏ-ஸ்டார் செடான் கார் மூலம் தனது மார்க்கெட் பங்களிப்பை வெகுவாக உயர்த்திக்கொள்ள முடியும் என மாருதி நம்புகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 13, 2012, 15:51 [IST]
English summary
After the much hyped launch of the Maruti Suzuki Ertiga MPV, the Indian auto major is now reportedly planning to launch a new sedan based on the A-Star hatchback. Earlier, there were reports that the carmaker could build a new sedan that will be be placed between the entry-level Swift Dzire and the SX4 mid-level sedan.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+