இந்தோனேஷியாவில் 8,500 எர்டிகா கார்கள் புக்கிங்

கடந்த மாதம் எர்டிகா காரை மாருதி இந்தியாவில் முதன்முறையாக விற்பனைக்கு கொண்டு வந்தது. எம்பிவி செக்மென்ட்டில் பெரும் போட்டியாளராக மாறியுள்ள எர்டிகா எதிர்பார்த்தது போன்றே மார்க்கெட்டில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 15,000க்கும் அதிகமான எர்டிகா கார்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்தியாவை தொடர்ந்து இந்தோனேஷியாவில் கடந்த 7ந் தேதி எர்டிகாவை மாருசு சுஸுகி அறிமுகம் செய்தது. அறிமுகமான கையோடு இதுவரை 8,500 புக்கிங்குகளை பெற்றுள்ளது எர்டிகா.
அங்கு ரூ.8.27 லட்சம் முதல் ரூ.9.55 லட்சம் விலையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது எர்டிகா. எனினும், பெரும் வரவேற்பை பெற்று புக்கிங்குகளை அள்ளிக் குவித்து வருகிறது.
இந்த மாதம் முதல் இந்தோனேஷியாவுக்கு எர்டிகாவை மாருதி ஏற்றுமதி செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications








